9 IAS அதிகாரிகள் திடீர் மாற்றம் - தமிழக அரசு அதிரடி
தமிழகத்தில் 9 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை ஆணையராக கலை அரசியும்,
தமிழக கதர் கிராமத் தொழில் வாரிய தலைமை செயல் அலுவலராக சம்பத்தும் நியமிக்கப்பட்டுள்ளார்.
நில நிர்வாகம் நகர்ப்புற நில உச்சவரம்பு மற்றும் நகர்ப்புற நிலவரி இயக்குநராக மகேஸ்வரியும்,
தமிழக நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநராக ஜான் லூயிஸ் ஐஏஎஸ்-ம் நியமிக்கப்பட்டுள்ளார். புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநராக மோகனும், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்குநராக சிவராசு நியமிக்கப்பட்டுள்ளனர்.
Next Story