அட்சய திருதியைக்கு சென்ற 9 பக்தர்கள் கோயிலிலே உடல் நொறுங்கி கோர மரணம்

x

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சிம்மாச்சல்த்தில் அப்பனசுவாமி திருக்கோவில் உள்ளது. அப்பன்னசாமியை நிஜ ரூப தரிசனம் மூலம் வழிபடுவதற்காக ஏராளமான பக்தர்கள் நேற்று இரவு முதல் சிம்மாச்சலத்தில் குவிந்திருந்தனர். நேற்று இரவு 12 மணியை அடுத்து சிம்மாச்சலத்தில் கன மழை பெய்தது.

அப்போது மலை மீது உள்ள 300 ரூபாய் தரிசன டிக்கெட் வரிசை மீது போடப்பட்டிருந்த சிமெண்ட் சுவர் இடிந்து விழுந்து சாமி தரிசன டிக்கெட் வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்த பக்தர்கள் பலர் சிக்கிக் கொண்டனர். அங்கிருந்த மற்ற பக்தர்கள், பாதுகாப்பு ஊழியர்கள், போலீசார், தீயணைப்பு படையினர் ஆகியோர் விரைந்து செயல்பட்டு இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக்கொண்ட பக்தர்களை மீட்டனர். இந்த சம்பவத்தில் ஒன்பது பக்தர்கள் பலியாகிவிட்ட நிலையில் மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்