மதுரை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் பிரிவில் 85 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தவிர புறநகர் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 250க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மதுரை சுற்றுவட்டார பகுதியில் வேகமாக பரவி வரும் காய்ச்சலை தடுக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.