சென்னையில் 80 வயது மூதாட்டி கொடூர பலாத்காரம்
சென்னையில் வீட்டில் தனியாக இருந்த 80 வயது மூதாட்டியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
சென்னை ஜாம்பஜார் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீட்டில் 80 வயது மூதாட்டி தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் அவரது வீட்டிற்குள் நுழைந்த மதுபோதையில் இருந்த நாகராஜ் என்பவர் மூதாட்டியை கொலை செய்து விடுவதாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் காயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இது குறித்து தகவலறிந்த போலீசார் மூதாட்டியை வன்கொடுமை செய்த நாகராஜை கைது செய்து விசாரணை நடத்தினர்.
Next Story
