8 பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை - போலி வார்டனாக வலம் வந்த இளைஞரின் சில்மிஷ வேலைகள்
திருப்பூர் மாவட்டம் அருகே பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் நடத்தப்பட்டு வரும் விடுதியில், தங்கியிருந்த 8 பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த, போலி வார்டன் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். சம்பந்தப்பட்ட விடுதியில் இருந்த வார்டனுக்கு பதிலாக, அங்கு தங்கியிருந்த 23 வயதான முன்னாள் மாணவர், வார்டன் போல செயல்பட்டு மாணவர்களை கவனித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக எழுந்த புகாரை அடுத்து, போலி வார்டனாக செயல்பட்ட இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story
