``பல் சிகிச்சையால் 8 பேர் உயிரிழப்பா?’’ - விரைவில் வெளிவரும் ரிப்போர்ட்
Tirupathur Issue | ``பல் சிகிச்சையால் 8 பேர் உயிரிழப்பா?’’ - விரைவில் வெளிவரும் ரிப்போர்ட்
வாணியம்பாடி பல் மருத்துவமனையில் பழைய கருவிகளை நோயாளிகளுக்கு பயன்படுத்தியதால் 8 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஞானமீனாட்சி பல் மருத்துவமனையில் நேரில் ஆய்வு செய்தார். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியிலுள்ள ஒரு தனியார் பல் மருத்துவமனையில் 2023ஆம் ஆண்டு சிகிச்சை பெற்ற 8 பேர் அடுத்தடுத்த நாள்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அந்த தனியார் கிளினிக்கில் ஆய்வு செய்த மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஞானமீனாட்சி, 2023-ல் நடந்த இச்சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு, விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Next Story
