வயல்வெளியில் 7 மயில்கள் பலி - விவசாயி கைது

x

புதுக்கோட்டை மாவட்டம் மேலாத்தூர் கிராமத்தில் வயல்வெளியில் ஏழு மயில்கள் உயிரிழந்து கிடந்தன. இது தொடர்பாக வனத்துறையினர் நடத்திய விசாரணையில் , சின்னப்பா என்ற விவசாயி அவரது வயலில் பயிரிடப்பட்ட வேர்க்கடலை மற்றும் தர்பூசணிகளை தொடர்ந்து சேதப்படுத்தி வரும் கோழிகள் மற்றும் எலிகளை விரட்டும் நோக்கில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த அரிசியினை வயல்வெளியில் தூவியது தெரியவந்தது. அதனை உண்ட மயில்கள் உயிரிழந்ததை அடுத்து, சின்னப்பாவை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்