"ஒரே வீட்டில் 79 பேர்.." ஷாக் கொடுத்த வாக்காளர் பட்டியல் | மக்கள் கோரிக்கை

x

ஒரே வீட்டில் 79 பேர்-வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நடத்த கோரிக்கை

நீலகிரி மாவட்டம் குன்னூர் தொகுதி வாக்காளர் பட்டியலில் ஒரே வீட்டில் 79 பேர் இருப்பதாக பதிவாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் சிறப்பு வாக்காளர் திருத்த முகாம் நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குன்னூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட கோடேரி கிராமத்திற்கான வாக்குச்சாவடி எண் 210 ற்க்கான வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்தபோது 11,12,17 ஆகிய வார்டுகளில் 9,10 வார்டுகளின் வாக்காளர்களும், இடம்பெற்று உள்ளனர். மேலும் இப்பகுதியில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன் வெளியேரியவர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்