Thangamayil Jewellery Offer| 100க்கு 75% தள்ளுபடியாம் - தங்கமயில் ஜுவல்லரி ஆடி ஆஃபர் அறிவிப்பு
100க்கு 75% தள்ளுபடியாம் - தங்கமயில் ஜுவல்லரி ஆடி ஆஃபர் அறிவிப்பு
ஆடிப்பெருக்கை முன்னிட்டு தங்க மயில் ஜுவல்லரியில் ஆஃபர் அறிவிப்பு ஆடிப்பெருக்கை முன்னிட்டு தங்கமயில் ஜுவல்லரியில் சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. தங்க நகைகள் உள்ளிட்ட அனைத்து தங்கப் பொருட்களுக்கும் 25 முதல் 75 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கு கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரையிலும், 7 கேரட்டுக்கு மேல் வைர நகைகள் வாங்கும்போது ஒரு கேரட்டுக்கு 25 ஆயிரம் ரூபாய் வரையிலும் தள்ளுபடி வழங்கப்படுவதாக திநகர் கிளை மேலாளர் குருபாலன் தெரிவித்துள்ளார். சென்னையில் தற்போது 10 கிளைகள் செயல்பட்டு வரும் நிலையில், புரசைவாக்கம் மற்றும் முகப்பேர் பகுதிகளில் புதிய கிளைகள் தொடங்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
