விளையாடும் போது துடிதுடித்து பலியான 7 வயது சிறுவன் - பெற்றோர்களே உஷார்

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை அருகே விவசாய நிலத்தில் உள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்த டிராக்டரில் பயணித்த 7 வயது சிறுவன் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிங்காரத்தோப்பு கிராமத்தில் பாஸ்கேல் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நிறுத்தப்படாமல் இயக்கத்திலேயே இருந்த டிராக்டர் மீது ஏறி இளைஞர் மற்றும் இரண்டு சிறுவர்கள் விளையாடியுள்ளனர். அப்போது ரிவர்ஸ் கியரை போட்டதால் டிராக்டர் கிணற்றுக்குள் விழுந்துள்ளது. இந்த விபத்தில் நீச்சல் தெரியாத காரணத்தினால்

டேனிஷ் என்ற சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்