நகையை சுற்றி நறுக்குனு 7 கேள்விகள்.. நிலைகுலைந்த நிகிதா
திருப்புவனம் அஜித்குமார் மரண வழக்கு - நிகிதாவிடம் சிபிஐ அடுக்கடுக்கான கேள்வி
- மடப்புரம் காவலாளி அஜித்குமார் மரண வழக்குல முக்கிய சாட்சியான நிகிதா கிட்ட சிபிஐ அதிகாரிகள் மூன்றரை மணி நேரம் தீவிர விசாரணை நடத்தி இருக்காங்க... அடுக்காக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விடை கிடைக்குமா?
- சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் பணியாற்றி வந்த காவலாளி அஜித்குமார், கடந்த ஜூன் 27 ஆம் தேதியன்று காரில் வைத்த நகை காணாமல் போனதாக மதுரை திருமங்கலத்தை சேர்ந்த நிகிதா என்ற பெண் அளித்த புகாரின் பேரில் திருப்புவனம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
- பின் ஜூன் 28ஆம் தேதி கோவில் உதவி ஆணையர் அலுவலகத்தின் பின்புறம் வைத்து தாக்கி விசாரணை நடத்தியதில் அஜித்குமார் உயிரிழந்தார்.
- இந்த வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு தனிப்படை காவலர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதனையடுத்து இந்த வழக்கானது சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டு டிஎஸ்பி மோஹித் குமார் தலைமையிலான குழு விசாரணை களத்தில் இறங்கியது.
- அஜித்குமாருடன் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சக ஊழியர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களான ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார், உதவி ஆணையரின் ஓட்டுனர் கார்த்திக்வேல், பிரவின்குமார், வினோத்குமார் மற்றும் நவீன்குமார் ஆகிய 5 பேரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
- இதன் தொடர்ச்சியாக அஜித்குமாரை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இடங்களுக்கு சென்று ரீ- கிரியேசன் எனப்படும் சம்பவம் குறித்து ஆதாரங்களை சேகரிக்கும் விசாரணையை மேற்கொண்டனர்.
- இப்படி 10 நாட்களாக இந்த சம்பவத்தில் தொடர்புடையை ஒவ்வொரு நபரையும் ஒவ்வொரு இடத்திற்கும் சென்று தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
- இந்நிலையில் 11ஆவது நாள் விசாரணையாக அஜித்குமார் கொலை வழக்கின் முக்கிய சாட்சியான மடப்புரம் கோவிலில் காரில் வைத்த நகை காணாமல் போனதாக புகாரளித்த கல்லூரி பேராசிரியை நிகிதா மற்றும் அவரது தாயார் சிவகாமி ஆகிய இருவரும் விசாரணைக்கு ஆஜராகினார்கள்.
- DSP மோஹித்குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் மூன்றரை மணி நேரம் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
- அதில், 27 ஆம் தேதியன்று நிகிதா, அவரது தாயாருடன் எங்கெங்கு சென்றார்? மருத்துவமனைக்கு சென்றார்களா? நகையை எந்த இடத்தில் வைத்து கழற்றினார்கள்? என்னென்ன வகையிலான நகைகள் இருந்தது? நகைக்கான ரசீது எங்கே? காருக்குள் நகை வைக்கப்பட்ட இடம்? போன்ற புகாரின் உண்மைத் தன்மை குறித்த பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டிருக்கிறது.
- மேலும் 27 ஆம் தேதி கோவிலில் வைத்து அஜித்குமாரிடம் பேசினார்களா? காலையில் கோவிலில் என்ன நடந்தது? மாலையில் திருப்புவனம் காவல்நிலையத்திற்கு அஜித்குமாரை அழைத்துசென்றபோது காவல்நிலையத்தில் நடந்தது என்ன? மற்றும் இரவில் திருப்புவனம் காவல்நிலையத்தில் வீடியோ எடுத்தது குறித்தும் கேள்விகள் எழுப்பினார்கள்.
- அதுமட்டுமின்றி நிகிதாவின் செல்போனை ஆய்வு செய்து அவருக்கு வந்த அழைப்புகள் குறித்தும், உரையாடல்கள் குறித்தும் அதிகாரிகள் அடுக்கடுக்கான கேள்விக்கணைகளை தொடுத்துள்ளனர்.
- முதலில் நிகிதாவின் தாயாரிடமும், பின் நிகிதாவிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. தொடர்ந்து பல அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
- முழுமையான விசாரணைக்கு பிறகே இந்த வழக்கில் மறைந்திருக்கும் மர்மங்கள் விலகும்.
Next Story
