7 பேர் ராஜினாமா.. 15 பேர் சஸ்பெண்ட்.. 10 பேர் கைது.. களமிறங்கிய DIG டீம்

மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு வழக்கை விசாரிப்பதற்கான சிறப்பு குழுவின் தலைவராக டிஐஜி அபிநவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு விவகாரத்தில் 5 மண்டலத் தலைவர்கள், 2 நிலைக்குழு தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளதுடன், பில் கலெக்டர்கள் உள்ளிட்ட 15 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

சொத்துவரி முறைகேடு தொடர்பாக இதுவரை ஒய்வு பெற்ற உதவி ஆணையர், உதவி வருவாய் அலுவலர் உள்பட 10 பேரை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

அதிமுக கவுன்சிலர் தொடர்ந்த வழக்கில், ஐ.பி.எஸ் அதிகாரி தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைத்து முறைகேடு தொடர்பாக விவரங்களை ஜூலை 25ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.

மதுரை சரக டி.ஐ.ஜி அபினவ்குமார் விசாரணைக்குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com