6.4 அடி பேருந்தில் 7 அடி உயர நடத்துநர்.. தெரிந்தவுடன் உத்தரவு போட்ட ரேவந்த்

தெலங்கானாவில், 7 அடி உயரமான அகமது மெஹதி என்ற நடத்துனர் 6.4 அடி உயரம் உடைய அரசு பேருந்துகளில் குனிந்தபடியே, நடத்துனராக அனுபவித்த சிரமம் முதல்வர் ரேவந்த் ரெட்டியின் பார்வைக்கு சென்றுள்ளது. இப்படி குனிந்தபடியே நாள் முழுவதும் பணி செய்து வந்த அகமது மெஹதி, கழுத்து மற்றும் முதுகுவலியால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவர் படும் சிரமத்தைக் கண்ட பயணிகள் சிலர், இது குறித்து முதல்வர் ரேவந்த் ரெட்டியை Tag செய்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டதன் விளைவாக ரேவந்த் ரெட்டி, போக்குவரத்து துறை அமைச்சர் பொன்னம் பிரபாகரிடம் இது குறித்து பேசியதாக தெரியவருகிறது. தொடர்ந்து இப்போது, இவர் பணிமனை அல்லது அலுவலகத்திற்கு பணிமாற்றம் செய்யப்படுவார் என போக்குவரத்து துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com