புளியந்தோப்பு ரவுடி படுகொலை வழக்கு : 7 பேர் கைது

புளியந்தோப்பு பகுதியில் ஓட ஓட விரட்டி ரவுடி படுகொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புளியந்தோப்பு ரவுடி படுகொலை வழக்கு : 7 பேர் கைது
Published on

சென்னை ஓட்டேரி டோபிகானா பகுதியை சேர்ந்த குமரன் மீது திருட்டு மற்றும்அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒரு திருட்டு வழக்கு சம்பந்தமாக கைது செய்யப்பட்டிருந்த குமரன் 15 நாட்களுக்கு முன்பு ஜெயிலில் இருந்து வெளியே வந்தார். இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு புளியந்தோப்பு பகுதியில் சென்று கொண்டிருந்த குமரனை மர்ம கும்பல் ஒன்று வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது.

இந்த சம்பவம் தொடர்பாக புளியந்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், கொலை வழக்கில் தொடர்புடைய அப்பு, பிரவீன்,சரத்குமார், தேவேந்திரன், அருண்குமார், நரேன்,சிற்பி ஆகிய 7 பேரை போலிசார் கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஒரு அறிவாள் மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் போலீசார் பறிமுதல் செய்தனர். முன்விரோதம் கராணமாக குமரனை, அப்பு தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com