சித்திரை திருவிழா 6ம் நாள்-ரிஷப வாகனங்களில் வீதியுலா வந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர்
உலக புகழ்பெற்ற சித்திரை பெருவிழாவின் ஆறாம் நாளில் தங்க, வெள்ளி ரிஷப வாகனங்களில் எழுந்தருளி மீனாட்சி சுந்தரேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் பெருவிழா ஏப்ரல் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு, தினசரி அம்மனும் சுவாமியும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றனர். ஆறாம் நாள் திருவிழாவை முன்னிட்டு சுவாமி பிரியாவிடை அம்மனுடன் தங்க, வெள்ளி ரிஷப வாகனத்தில் புறப்பாடாகி நான்கு மாசி வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
Next Story
