Three Phase Power| மின்சாரம் இல்லாமல் 600 ஏக்கர் கருகி நாசம் - விவசாயிகள் கண்ணீர்
மின்சாரம் இல்லாமல் 600 ஏக்கர் கருகி நாசம் - விவசாயிகள் கண்ணீர்
மின்சாரமின்றி 600 ஏக்கர் நெற்பயிர்கள் கருகி நாசம் - விவசாயிகள் கண்ணீர் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே மும்முனை மின்சாரம் வழங்கப்படாததால், சுற்றியுள்ள கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த 600 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி முழுமையாகக் கருகிச் சேதமடைந்துள்ளன. பந்தநல்லூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஏக்கருக்கு நாற்பதாயிரம் ரூபாய் வரை செலவு செய்து சாகுபடி செய்த விவசாயிகள், மின்வாரியத்தின் அலட்சியத்தால் நிலங்கள் வெடித்துள்ளதாகக் கண்ணீருடன் வேதனை தெரிவிக்கின்றனர். அறுவடை செய்யக்கூட வழியில்லாமல் வைக்கோலுக்கும் வரம் தேடும் சூழல் ஏற்பட்டுள்ளதால், அரசு உடனடியாகப் பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
