ஊருக்குள் புகுந்த 60 காட்டு யானைகள் : பயிர்கள் சேதம்

ஒசூர் அருகே சுற்றித் திரியும் 60க்கும் மேற்பட்ட காட்டுயானைகளால், தக்காளி, வாழை, தென்னை, பப்பாளி உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஊருக்குள் புகுந்த 60 காட்டு யானைகள் : பயிர்கள் சேதம்
Published on
ஒசூர் சானமாவு வனப்பகுதியில் 60க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சுற்றித்திரிகிறது. இந்த யானைகள் நேற்று இரவு பாத்தகோட்டா கிராமத்தில் புகுந்து தக்காளி, பூகோசு, வாழை, தென்னை, பப்பாளி, முருங்கை, வெள்ளரி, கொய்யா ஆகிய பயிர்களை சேதப்படுத்தின. இதனால் பாத்தகோட்டா பகுதி விவசாயிகளுக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும் சேதமான பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அரசிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com