மசூதி மீது சரிந்த 60 அடி போன் டவர்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பலத்த காற்றில் தனியார் லாட்ஜ் கட்டிடத்தின் மேல் இருந்த 60 அடி உயர தொலைத்தொடர்பு கோபுரம் அருகில் இருந்த பள்ளிவாசல் மீது சாய்ந்தது. அருகில் வேலை பார்த்த தொழிலாளர்கள் காயங்கள் இன்றி தப்பிய நிலையில், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மிகவும் மோசமாக உள்ள கட்டிடத்தின் மீது அரசு அனுமதி பெற்று கோபுரம் நிறுவப்பட்டதா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Next Story
