6 வயது சிறுவனின் சடலம் குவாரியில் இருந்து மீட்பு : அடித்து கொலையா ? - போலீசார் தீவிர விசாரணை

திருமங்கலம் அருகே உச்சப்பட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த 6 வயது சிறுவன் அப்பகுதியில் உள்ள குவாரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
6 வயது சிறுவனின் சடலம் குவாரியில் இருந்து மீட்பு : அடித்து கொலையா ? - போலீசார் தீவிர விசாரணை
Published on

உச்சப்பட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த சந்திரதாசன் என்பவரின் 6 வயது மகன் கவுதமை, அனுசன் என்பவர் வெளியில் அழைத்து சென்றிருந்தார். பின்னர் வீடு திரும்பிய அனுசன், கவுதமை காணவில்லை என சந்திரதாசனிடம் தெரிவித்துள்ளார். பின்னர் சந்தேகத்தின் பேரில் அனுசன் மீது காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது முகாம் அருகில் உள்ள குவாரியில் சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டது . பின்னர் அனுசனை போலீசார் கைது செய்து கவுதம் அடித்து கொலை செய்யப்பட்டாரா ? அல்லது தவறி விழுந்து பலியானரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com