600க்கு 599... சாதனை மாணவியின் தனித்துவ லட்சியம்... கொண்டாடிய பழனி
பழனி தனியார் பள்ளி மாணவி ஓவியாஞ்சலி, பிளஸ் டூ தேர்வில் 600 க்கு 599 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். தமிழ், கணக்குப்பதிவியல் ,வணிகவியல், பொருளியல் ,கணினி பயன்பாடு பாடங்களில் நூறு மதிப்பெண்களும், ஆங்கில பாடத்தில் 99 மதிப்பெண்ணும் பெற்று அசத்தியுள்ளார். இவருக்கு பள்ளி ஆசிரியர்கள் , பெற்றோர்கள் இனிப்பு வழங்கி பாராட்டு தெரிவித்தனர். மேலும் ரிசர்வ் வங்கியில் பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ள மாணவி ஓவியாஞ்சலி ஆசிரியர்கள் நன்கு ஒத்துழைப்பு கொடுத்து கற்றுக் கொடுத்ததன் காரணமாக இவ்வளவு மதிப்பெண் எடுக்க முடிந்ததாக கூறினார்.
Next Story