ஒரே நாளில் ஜாம் ஜாம்ன்னு நடந்த 57 திருமணங்கள்.. திக்கு முக்காடிய குன்றத்தூர் முருகன் கோவில்
முகூர்த்த நாளையொட்டி, சென்னை குன்றத்தூர் முருகன் கோவிலில் ஒரே நாளில் 57 திருமணங்கள் நடைபெற்றன. வழக்கமாக விடுமுறை நாளில் வரும் பக்தர்களுடன், திருமணங்களும் ஒரே நேரத்தில் நடைபெற்றதால் கோவிலில் கூட்டம் அலைமோதியது. இதன் காரணமாக குன்றத்தூர் முருகன் கோவிலுக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Next Story
