நாடாளுமன்றத் தேர்தல் : 5689 வாக்குப் பதிவு இயந்திரங்கள் வருவாய் வட்டாட்சியரிடம் ஒப்படைப்பு

விருத்தாசலத்தில் உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கில் 9 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் : 5689 வாக்குப் பதிவு இயந்திரங்கள் வருவாய் வட்டாட்சியரிடம் ஒப்படைப்பு
Published on

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கில் 9 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.மொத்தம் ஐந்தாயிரத்து 689 வாக்குபதிவு இயந்திரங்களை வருவாய் வட்டாட்சியரிடம், விருத்தாசலம் சார் ஆட்சியர் பிரசாந்த் ஒப்படைத்தார். இதில் விருத்தாசலம் தேர்தல் அதிகரி அன்புராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அதிகாரிகளுக்கு பயிற்சி முகாம் விரைவில் நடத்தப்பட உள்ளதாக அதிகாரிகள்

தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com