சிறுமியை கர்ப்பமாக்கிய 55 வயது முதியவர் | நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

x

சிறுமியை கர்பமாக்கிய வழக்கில் குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை

நெல்லை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்பமாக்கிய வழக்கில், குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியை பூர்வீகமாகக் கொண்டவர் 55 வயதான ஜகுபர் உசேன். இவர் பாளையங்கோட்டை அருகே உள்ள பர்கிட் மாநகரம் பகுதியில் வசித்து வந்தார். கடந்தாண்டு 17 வயது சிறுமியை ஜகுபர் உசேன் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து வந்ததில், சிறுமி கர்பமாகி குழந்தையை பெற்றெடுத்தார். இதுகுறித்து சிறுமியின் தரப்பில் புகாரளிக்கப்பட்ட நிலையில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ஜகுபர் உசேனை கைது செய்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைப்பெற்று வந்த நிலையில் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. டி.என்.ஏ பரிசோதனையின் மூலம் சிறுமிக்கு பிறந்த குழந்தைக்கு ஜகுபர் உசேன் தான் காரணம் என உறுதியான நிலையில், ஜகுபர் உசேனுக்கு சாகும் வரை சிறைத்தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்