"மதுரையில் 122 கோடிக்கு 533 மனை விற்பனை! G Square-ன் அதிரடி சாதனை!"

x

Fortune City திருவிழா' - G Square நடத்திய சிறப்பு பட்டிமன்றம்

-Fortune City திருவிழா என்கிற பெயரில் G Square நிர்வாகம் சார்பில் மதுரை கப்பலூரில் அந்நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. G Square இதுவரை 500-க்கும் மேற்பட்ட வீட்டு மனைகளை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இதனைக் கொண்டாடும் வகையில், இந்த திட்டம் அமைந்துள்ள கப்பலூர் விமான நிலைய சாலையில் வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இந்த பட்டிமன்றம் நடத்தப்பட்டது. நிலம் வாங்கியவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் இதில் பங்கேற்றனர். நடுவராக இருந்த சாலமன் பாப்பையாவின் தலைமையில் நடந்த இந்த பட்டிமன்றத்தில், பேச்சாளர்கள் ராஜா, நகைச்சுவை நடிகர் மதுரை முத்து உள்ளிட்டோர் பலரும் பங்கேற்று பேசினர். நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் விற்பனை நிர்வாக துணை தலைவர் சிவக்குமார், மதுரையில் திட்டம் அறிவிக்கப்பட்ட 72 மணி நேரத்தில் 533 வீட்டு மனைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்றும்,122 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகி உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், மதுரையில் இதுவரை இப்படியொரு விற்பனை நடந்ததில்லை என பெருமிதத்துடன் தெரிவித்த அவர், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாலைகளின் தரத்திற்கு ஈடாக சாலைகள் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்