522 கிராம் தங்கம் கடத்தல் - இரு பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை

முஹம்மது இப்ராஹிம் என்பவர் தனது ஆசனவாயிலில், 14.11 லட்சம் மதிப்புள்ள 522 கிராம் தங்கக் கட்டியை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
522 கிராம் தங்கம் கடத்தல் - இரு பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை
Published on
திருச்சி விமான நிலையத்தில் துபாய் செல்லவிருந்த, ஏர் இந்தியா விமான பயணிகளின் உடைமைகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்துகொண்டிருந்தனர். அப்போது, காரைக்குடியை சேர்ந்த சம்சுதீன் என்பவர் தனது பாக்கெட்டில் 4 புள்ளி 13 லட்ச ரூபாய் மதிப்புள்ள சவுதி அரேபிய நாட்டு ரியால் நோட்டுகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதேப்போல, சார்ஜாவில் இருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா விமானத்தில் வந்த சென்னையைச் சேர்ந்த முஹம்மது இப்ராஹிம் என்பவர் தனது ஆசனவாயிலில், 14 புள்ளி 11 லட்சம் மதிப்புள்ள 522 கிராம் தங்கக் கட்டியை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, வெளிநாட்டு கரன்சி மற்றும் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com