பாலத்தின் அடியில் எரிந்த சிறுமியின் 5 மாத கரு.. Kallakurichi அதிர்ச்சி சம்பவம்

x

Abortion Case | பாலத்தின் அடியில் எரிந்த சிறுமியின் 5 மாத கரு.. Kallakurichi அதிர்ச்சி சம்பவம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே சட்டத்திற்கு புறம்பாக சிறுமிக்கு கருக்கலைப்பு செய்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்...

கள்ளக்குறிச்சி அருகே சட்டத்துக்கு புறம்பாக சிறுமிக்கு கருக்கலைப்பு செய்த போலி மருத்துவர் கைது

கருவில் இருந்த குழந்தையை கலைத்து அதனை எரித்த இடத்தில் தடையவியல் துறையினர் ஆய்வு செய்து வருவதால் பரபரப்பு...

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே தேவபாண்டலம் கிராமத்தில் சாய் சிவா மெடிக்கல் இயங்கி வருகிறது, இதில் மருந்தாளராக சிவா ஆனந்த் என்பவர் முறையாக மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு ஊசி போடுவதும், மருந்து வழங்குவதும் போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார், இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருக்கு கரு கலைப்பு செய்ததாக புகாரி எழுந்த நிலையில் தனியார் (சாய் சிவா )மெடிக்கலில் கடந்த இரண்டு மணி நேரமாக அதிரடியாக காவல்துறையினர், ஆய்வு செய்து வருகின்றனர் இந்த நிலையை 5 மாதம் கருவில் இருந்த குழந்தையை கலைத்து சங்கராபுரம் மணிமுத்தா ஆற்று பாலத்தில் அடியில் எரித்த இடத்தில் தடயவியல் துறையினர் தற்போது திடீரென்று ஆய்வு செய்து வருகின்றனர், இந்த நிலையில் கருவில் இருந்த குழந்தையை கலைத்து எரிக்கப்பட்ட சம்பவம் சங்கராபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்