5 லட்சம் கோடி மதிப்பிலான ஹெராயின் காணாமல் போன விவகாரம்

5 லட்சம் கோடி மதிப்பிலான ஹெராயின் காணாமல் போன விவகாரம்

#heroin #delhihighcourt #delhi #thanthitv

சென்னையை சேர்ந்த பத்திரிகையாளர் அரவிந்தாஷன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2018 முதல் 2020 ஆண்டு வரை.. நாடு முழுவதும் கைப்பற்றப்பட்ட ஹெராயின் தொடர்பான தரவுகள் வெளியிடப்பட்டதாகவும், இதில் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் தரவுகளுக்கிடையே முரண்பாடு இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இது தொடர்பாக மத்திய உள்துறை செயலருக்கு கடிதம் அனுப்பியும் நடவடிக்கை இல்லையென குறிப்பிட்ட அவர், கடந்த 2018 முதல் 2020 காலகட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட போதைபொருள்கள் குறித்தான தரவுகளை அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, இந்த விவகாரத்தில் 5 லட்சம் கோடி மதிப்பிலான ஹெராயின் காணாமல் போனது குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைக்க உத்தரவிடுமாறும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com