கொத்தாக வந்த 5 நாள் லீவு... நேரம் பார்த்து விழுந்த பேரிடி - "தரையில் பயணிக்க விமான கட்டணமா?"

x

விடுமுறை நாட்கள் என்றாலே, ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் விலை, விமான டிக்கெட் விலைக்கு இணையாக உயர்ந்துவிடும். ஆனால் இந்த முறை விமான டிக்கெட்டையும் மிஞ்சி விட்டது ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் விலை

பள்ளி மாணவர்களுக்கு கடந்த 28ம் தேதியில் இருந்தே காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது... வியாழக்கிழமை மிலாடி நபி விடுமுறை, அதனை தொடர்ந்து சனி, ஞாயிறு கிழமைகளில் விடுமுறை, காந்தி ஜெயந்தி விடுமுறை என கொத்தாக 5 நாட்கள் விடுமுறை வந்து சேர்ந்தது...

அடுத்தது தீபாவளிக்குத்தான் விடுமுறை என்பதால், மக்களும் தங்கள் சொந்த ஊருக்கு சென்று திரும்ப முடிவு செய்தனர். அதற்கு முன்பாகவே, தமிழ்நாடு போக்குவரத்து கழகம் 1100 சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்திருந்தது

போக்குவரத்து கழகம் சிறப்பான வசதிகளை செய்து கொடுத்திருந்தாலும், ஆம்னி பேருந்துகளும் மக்களின் பிரதான தேர்வு பட்டியலில் இருந்தது. உடனே, நேரம் பார்த்து 3 முதல் 5 மடங்காக உயர்ந்துவிட்டது ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் விலை.

திருச்சியிலிருந்து, சென்னைக்கு குறைந்த பட்சம் 1500 ரூபாயிலிருந்து, அதிகபட்சம் 3000 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது. கோவையிலிருந்து சென்னை வரை, குறைந்தப்பட்சம் 1500 ரூபாயிலிருந்து, அதிகபட்சம் 3000 ஆயிரம் வரையும் உயர்ந்துள்ளது.

அதே போல, மதுரையில் இருந்து சென்னை வர குறைந்தபட்சம், 1900 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் 4800 வரையும், தூத்துக்குடியிலிருந்து, சென்னை வர குறைந்தபட்ச கட்டணம் 2100 லிருந்து, அதிகப்பட்சம் 3500 ரூபாய்வரையும் உயர்ந்துள்ளது

நெல்லையில் இருந்து சென்னைக்கு வர குறைந்தப்பட்சம், 2000 ரூபாயும், அதிகபட்ச கட்டணம் 5,000 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகின்றது. சேலத்திலிருந்து சென்னைக்கு வர குறைந்த பட்ச கட்டணம் 1500 ரூபாயிலிருந்து, 2500 ரூபாய் வரையும் டிக்கெட் விலை உயர்ந்துள்ளது





Next Story

மேலும் செய்திகள்