மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (13-07-2025)

x

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே டீசல் ஏற்றிச்சென்ற சரக்கு ரயிலில் பயங்கர தீ விபத்து...

10 மணி நேரத்திற்கும் மேலாக எரியும் தீயை அணைக்கும் பணி தீவிரம்...


"சென்னை இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இருந்து பெங்களூருக்கு வேகன் மூலம் எடுத்துச் செல்லப்பட்ட எரிபொருள் தீ பற்றி விபத்து"...

3 வேகன்கள் தண்டவாளத்தில் இருந்து விலகியதில் எரிபொருள் கசிந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே விளக்கம்...

திருவள்ளூரில் சரக்கு ரயில் தீ விபத்து நிகழ்ந்த இடத்தில் அமைச்சர் நாசர் ஆய்வு...

தீ விபத்து காரணமாக குடியிருப்புகளில் இருந்து வெளியேறிய மக்களுக்கு காலை உணவு வழங்கினார்...

திருவள்ளூர் சரக்கு ரயில் தீ விபத்தால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என, அமைச்சர் நாசர் விளக்கம்...

தீ விபத்து நிகழ்ந்த இடத்திற்கு அருகாமையில் வசிக்கும் பொதுமக்களுக்கு மாற்று இருப்பிடம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் பேட்டி...

மக்கள் ஆதரவு பெருகப் பெருக பொறுப்பும், கடமையும் கூடுகிறது...

மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும் எனவும், திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்...

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் குடிநீர் பாட்டிலில் பல்லி கிடந்ததாக புகார்..

பாட்டிலை தயாரித்த ஆலையை முற்றுகையிட்டு போராட்டம்...

த.வெ.க ஆர்ப்பாட்டத்தில் 25க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு...

வெப்பத்தின் காரணமாக மயக்கம் அடைந்த நிலையில், மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பு...

பெனிக்ஸ், ஜெயராஜ் வழக்கை சிபிஐக்கு மாற்றியபோது அவமானம் என்றார் முதல்வர் ஸ்டாலின்...

இன்றைக்கு அஜித்குமார் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதற்கு பெயர் என்ன எனவும் தவெக தலைவர் விஜய் கேள்வி...


Next Story

மேலும் செய்திகள்