வெடித்து சிதறிய 42 வீடுகள்.. திருப்பூரையே நடுங்கவிட்ட சத்தம்-எல்லாமே போச்சு

x

திருப்பூரில் சிலிண்டர் வெடி விபத்தில் வீடுகளை இழந்தவர்கள் மாற்று துணி கூட இல்லாமல் அவதிபடுவதாக தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் கல்லூரி சாலை, எம்ஜிஆர் நகர் பகுதியில் உள்ள தகரக் கொட்டகை குடியிருப்பில் அடுத்தடுத்து 9 சிலிண்டர்கள் வெடித்த விபத்தில் 42 வீடுகள் எரிந்து தரைமட்டமானது. இதில் வீடுகளில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பொருட்கள் மற்றும் ஆவணங்கள் எரிந்து கருகியது. இந்த வீடுகளில் குடி இருந்த 70 குடும்பங்கள் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளானர். பல ஆண்டுகளாக உழைத்து சேமித்த அனைத்தும் ஒரே நாளில் இழந்துவிட்டதாக தெரிவிக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்