மிலாடி நபி விழாவில் 40,000 புரோட்டா பிரசாதம்
மிலாடி நபி - தர்காவில் '40 ஆயிரம் புரோட்டாக்கள்' பிரசாதம்
மிலாடி நபியை முன்னிட்டு, கிருஷ்ணகிரியில் பழமையான சங்கல் தோப்பு தர்காவில் 40 ஆயிரம் புரோட்டாக்கள் தயார் செய்யப்பட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது. தர்கா முன்பாக அமைக்கப்பட்டுள்ள கொடிமரங்களில் சங்கல் தோப்பு தர்காவை சேர்ந்த மஸ்தாணி அம்மா மற்றும் பாபுஷா ஆகியோர் சிறப்பு துவா மற்றும் பாத்தியா நடத்தினர். பின்னர், ஆயிரத்து 500 கிலோ மைதா மாவினைக் கொண்டு, தயாரிக்கப்பட்ட சுமார் 40 ஆயிரம் புரோட்டாக்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த விழாவில் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பலரும் சாதி மத பேதம் இன்றி கலந்து புரோட்டாக்களை ருசித்து சாப்பிட்டனர்.
Next Story
