Erode | Temple Festival | 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த செம்முனி ஆண்டவர் திருக்கோயில் திருவிழா

400 ஆண்டுகள் பழமை வாய்ந்த செம்முனி ஆண்டவர் திருக்கோயில் திருவிழா

400 ஆண்டுகள் பழமை வாய்ந்த செம்முனி ஆண்டவர் திருக்கோயில் திருவிழா #erode #temple #festival #thanthitv அந்தியூரில் செம்முனி ஆண்டவர் கோயில் திருவிழா கோலாகலம் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே குரும்பபாளையத்தில் உள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த செம்முனி ஆண்டவர் திருக்கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆடி மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த விழாவின் முக்கிய நிகழ்வான காவு குட்டி கொடுக்கும் நிகழ்ச்சியில், செம்முனி ஆண்டவர், மன்னாதீஸ்வரர் மற்றும் பச்சை நாயகி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, வனக்கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்ட சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, பக்தர்கள் நேர்த்திக்கடனாக கொண்டு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டன. செம்முனி ஆண்டவரிடம் வேண்டுதல் வைத்து அது நிறைவேறிய பக்தர்கள், பல ஆண்டுகளாக இந்த வழக்கத்தை தொடர்ந்து வருவதாக தெரிவித்தனர். திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com