ஆற்றில் சிக்கித் தவித்த 40 செம்மறி ஆடுகள் மீட்பு

x

மணல் படுகையில் சிக்கித் தவித்த ஆடுகள் மீட்பு

முசிறி அருகே காவிரி ஆற்றில் கரைக்கு வர முடியாமல் மணல் படுகையில் சிக்கித் தவித்த 40 செம்மறி ஆடுகளை தீயணைப்பு படையினர் மீட்டனர்.

மேட்டூரில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இங்கு ராமசாமி என்பவர் தனக்கு சொந்தமான 40 செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்ற நிலையில் ஆடுகள் கரைக்கு திரும்ப முடியாமல் மணல் படுகையில் சிக்கிக்கொண்டது. இது தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் விரைந்து சென்று 40 ஆடுகளையும் பத்திரமாக மீட்டனர். காவிரி ஆற்றில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்