4 வயது குழந்தைக்கு பாலியல் சீண்டல் -உடந்தையாக இருந்த பெண் ஊழியர்..அதிரடி காட்டிய போலீசார்

x

Namakkal | 4 வயது குழந்தைக்கு பாலியல் சீண்டல் - உடந்தையாக இருந்த பெண் ஊழியர்.. அதிரடி காட்டிய போலீசார்

நாமக்கல்லில் அங்கன்வாடி மையத்தில் படிக்கும் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு உடந்தையாக இருந்த ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் தார்காடு அங்கன்வாடி மையத்தில் படித்து வரும் 4 வயது குழந்தைக்கு பாலியல் சீண்டல் நடந்துள்ளதாக குழந்தையின் பெற்றோர் புகார் அளித்திருந்தனர்.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அங்கன்வாடியில் மையத்தில் உதவியாளராக பணிபுரியும் சரஸ்வதியை பார்க்க வந்த தறிப்பட்டறை உரிமையாளர் தேவராஜ் என்பவர் குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் அதற்கு சரஸ்வதி துணையாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சரஸ்வதியை கைது செய்த போலீசார். தலைமறைவாக உள்ள தேவராஜை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்