சூப்பர் மார்க்கெட்டில் திருடிய 4 பெண்கள் - வெளியான சிசிடிவி.. "போட்ட பிளான் தான் வேற லெவல்"
விருதுநகரில் தனியார் சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை திருடிய 4 பெண்களை போலீசார் கைது செய்தனர். சில நாட்களுக்கு முன்பு சூப்பர் மார்க்கெட்டிற்கு வந்த 4 பெண்கள், 12 நெய் பாட்டில்கள், 14 ஷாம்பூ பாட்டில்கள் என 14 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். சிசிடிவி மேமராவில் இது பதிவான நிலையில், அதே சூப்பர் மார்க்கெட்டிற்கு மீண்டும் திருட வந்த பெண்களை,, கையும் களவுமாக பிடித்த சூப்பர் மாக்கெட் நிர்வாகத்தினர் போலீசில் ஒப்படைத்தனர். சம்பவத்தில் ஈடுபட்ட மதுரையைச் சேர்ந்த 4 பெண்களையும் போலீசார் கைது செய்தனர்.
Next Story
