பயணிகள் கவனிக்க..! 4 ரயில்கள் திடீர் ரத்து - வெளியான அறிவிப்பு
திருச்சி கோட்டத்தில் நடைபெற்று வரும் ரயில்வே பராமரிப்பு பணிகள் காரணமாக, புதன்கிழமை 4 ரயில்கள் பகுதி நேரம் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. தாம்பரத்தில் இருந்து காலை 9.45 மணிக்கு விழுப்புரம் செல்லும் பயணிகள் ரயிலும், விழுப்புரத்தில் இருந்து மதியம் 1.40 மணிக்கு சென்னை கடற்கரை வரும் பயணிகள் ரயிலும் பகுதி நேரமாக ரத்து செய்யப்பட உள்ளது. இதேபோல், சென்னை எழும்பூரில் இருந்து காலை 6.35 மணிக்கு புதுச்சேரி செல்லும் ரயிலும், புதுச்சேரியில் இருந்து மதியம் 3 மணிக்கு திருப்பதி செல்லும் ரயிலும் பகுதி நேரம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story