திடீரென கவிழ்ந்த மினி பேருந்து குடும்பத்துடன் கோயிலுக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்

x

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியிலிருந்து சமயபுரம் முத்துமாரியம்மன் கோவிலுக்கு சென்று கொண்டிருந்த மினி பேருந்து, மதுரை-ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்