காட்டுப்பன்றி தாக்கி 4 பேருக்கு நேர்ந்த கதி - கொடைக்கானலில் பரபரப்பு
கொடைக்கானல் மன்னவனூர் கிராமத்தில் காட்டுப்பன்றி தாக்கியதில் சிறுவன் உட்பட 4 விவசாயிகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மலைப்பூண்டு தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தவர்களை காட்டுப்பன்றி கடுமையாக தாக்கியுள்ளது. காயம்பட்டவர்களை மருத்துவமனைக்கு கொன்டு சென்ற நிலையில், அங்கு மருத்துவர்கள் இல்லை என கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் காட்டுப்பன்றியை விரட்ட வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Next Story
