Thiruparankundram Car| காருக்குள் 4 பேர்.. திருப்பரங்குன்றம் அருகே பயங்கரம்

காருக்குள் 4 பேர்.. திருப்பரங்குன்றம் அருகே பயங்கரம்

#thirupparankundram #car

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே, தோப்பூர் நான்கு வழிச்சாலையில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்து முற்றிலும் சேதமானது. உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த நான்கு நண்பர்கள், மதுரை பாண்டி கோவிலுக்குச் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டது. காரின் முன்பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியதைத் தொடர்ந்து, சாலையோரம் காரை நிறுத்தி நான்கு பேரும் கீழே இறங்கினர். அடுத்த சில நொடிகளில் கார் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக நான்கு பேரும் காயமின்றி உயிர் தப்பினர்.

X