சென்னை : பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 4 பேர் கைது

சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை : பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 4 பேர் கைது
Published on
சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் நேற்றிரவு பயங்கர ஆயுதங்களுடன் நின்று கொண்டிருந்த 4 பேர் போலீசாரை பார்த்ததும் ஓடியுள்ளனர். அவர்களை விரட்டிப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், கடந்தாண்டு தண்டையார் பேட்டை குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் ஜீவா என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த லக்‌ஷமன், பிரபாகரன், கோவிந்தராஜ் மற்றும் ராஜ்குமார் என்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார், ஆயுதங்களையும் பறிமுதல் செய்து தொடர் மேல் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com