தாம்பரத்தில் 35 வயது ஆண் பிணம் - குழம்பி நிற்கும் போலீஸ்

x

சென்னை, தாம்பரம், சந்தோஷபுரம் பகுதியில் உள்ள வனத்துறை அலுவலகம் அருகே, 35 வயது மதிக்க தகுந்த இளைஞரின் சடலம் கண்டறியப்பட்டள்ளது. உடலை கைப்பற்றிய போலீசார், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்துள்ளனர். இளைஞரின் ஊர் மற்றும் பெற்றோர் பற்றி எந்தவித தகவலும் இல்லாத நிலையில், போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தகவல் அறிந்தவர்கள் டி12 சேலையூர் காவல் நிலையத்திற்கோ, தாம்பரம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கோ தகவல் தரும்படி போலீசார் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்