சென்னை பேருந்தில் கட்டு கட்டாக ரூ.33 லட்சம் பணம்

x

ஆம்னி பேருந்தில் கடத்தப்பட்ட ரூ.33.04 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

தஞ்சாவூரில் தனியார் ஆம்னி பேருந்தில் கடத்தப்பட்ட 33 லட்சம் ரூபாய் ஹவாலா பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். ஒரத்தநாடு பகுதிக்கு, ஆம்னி பேருந்தில், போதை பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சென்னையில் இருந்து வந்த ஆம்னி பேருந்தில் பயணித்த சையத் அலாவுதீன், ஜாபர் அலி ஆகியோரை விசாரித்ததில், ஹாவாலா பணம் வைத்திருந்தது தெரிய வந்தது. சென்னையில் செல்போன் கடை நடத்தி வரும் இவர்கள், ஒரத்த நாட்டை சேர்ந்த ஒருவருக்கு ஒப்படைப்பதற்காக கொண்டு சென்ற 33 லட்சத்து 4 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்