துறவறம் பூண்ட 31 வயது இளம் பெண்

ஈரோட்டு இந்திராநகரில் வசிக்கும் ஜெயின் சமூகத்தை சேர்ந்த ஸ்வேதா என்ற 31 வயது இளம்பெண் துறவறம் பூண்டார்.
துறவறம் பூண்ட 31 வயது இளம் பெண்
Published on
ஈரோட்டு இந்திராநகரில் வசிக்கும் ஜெயின் சமூகத்தை சேர்ந்த ஸ்வேதா என்ற 31 வயது இளம்பெண் துறவறம் பூண்டார். இதற்காக அங்குள்ள ஜெயின் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், குதிரையில் ஊர்வலமாக சென்ற ஸ்வேதா, தான் அணிந்திருந்த ஆபரணங்களை கழற்றி வீசினார். நகரின் பல்வேறு பகுதிகள் வழியாக சென்ற ஊர்வலம், தெப்பக் குளம் வீதியில் நிறைவடைந்தது. வருகிற ஜனவரி 19ந் தேதியன்று ஸ்வேதா தனது குடும்பத்தை விட்டு முழுமையாக துறவறம் மேற்கொள்கிறார்.
X

Thanthi TV
www.thanthitv.com