கரூர், குந்தாணி பாளையம் ஜெ.ஜெ நகரில், கழைக்கூத்தாடிகள் பகுதியில் சுமார் 80க்கும் மேற்பட்டோர் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்கள் குடியிருக்கும் பகுதிக்கோ, அல்லது வேறு இடத்திலோ இவர்களுக்கு பட்டா வழங்கவில்லை. மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக கூறி வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியுள்ளனர்.