கொளத்தூரில் ஒரே வீட்டில் 30 வாக்காளர்களா? - TN Fact Check டீம் மறுப்பு

x

கொளத்தூரில் ஒரே வீட்டில் 30 வாக்காளர்களா? - TN Fact Check டீம் மறுப்பு


முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூரில் ஒரே வீட்டில் 30 வாக்காளர்கள் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் 84-ஆவது வாக்குச்சாவடியில் வீட்டு எண் 11-இல் 30 வாக்காளர்கள் உள்ளதாகவும்,

ரஃபியுல்லா என்ற பெயரில் 3 வாக்காளர்கள் இருப்பதாகவும் பாஜக எம்.பி. பேசியதை தமிழக பாஜக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.

இதற்கு அதிகாரபூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் அளித்த விளக்கத்தில், அந்த வீடு அடுக்குமாடி குடியிருப்பு என தெளிவுபடுத்தியுள்ளது.

வரிசை எண் 40 முதல் 75 வரையில் உள்ள வாக்காளர்கள் 11 எண் கொண்ட ஏ.எஸ். வீனஸ் கோர்ட் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருவதாகவும், ரஃபி என்பவரின் பெயரில் 3 வாக்காளர்கள் இல்லை என்றும் விளக்கமளித்துள்ளது.

அந்த வகையில், வாக்குச்சாவடி எண் 157-இல் ரஃபியுல்லா பெயர் தந்தை, கணவர் என்ற இடங்களில் வருவதாக தெரிவித்த தகவல் சரிபார்ப்பகம்,

அந்தக் குடியிருப்பில் இஸ்லாமியர்கள் மட்டுமே வசிப்பது போன்ற தவறான பிரசாரத்தை பாஜக மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்