தவித்த 30ஆயிரம் குடும்பம்... கிடைத்த குட் நியூஸ்... சென்னையில் மாறியது நிலை

x

சென்னை தண்டையார்பேட்டை IOC Metro Water நீர்த்தேக்கத்தில் இருந்து லாரியை இயக்க ஓட்டுநர்கள் மறுத்து வந்த நிலையில், பேச்சுவார்த்தைக்குப் பின் ஓடுனர்களின் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகம் தடைபட்டது. நீர்த்தேக்கத்தில் உள்ள அதிகாரிகள் அங்குள்ள கிளீனர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, அதிகாரிகளுக்கும், ஓட்டுநர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால், ஓட்டுநர்கள் லாரியை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு, ஓட்டுநர்கள் பணிக்குத் திரும்பியதால், நீர் விநியோகம் தற்போது சீரானது.


Next Story

மேலும் செய்திகள்