யானை தந்தத்தை விற்க முயன்ற 3 பேர்..போலீஸ் எடுத்த ஆக்ஷன்
தாண்டிக்குடி மலைப்பகுதியில் யானை தந்தத்தை விற்க முயன்ற, 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி மலைப்பகுதியை சேர்ந்த சிலர் யானை தந்தத்தை விற்பனை செய்ய முற்படுவதாக, வத்தலகுண்டு வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தொடர்ந்து வனசரகர் காசிலிங்கம், வனவர் முத்துக்குமார் ஆகியோர், வியாபாரி போல் பேசி சுருளிவேல், ராதாகிருஷ்ணன், பாஸ்கரன் ஆகிய 3 பேரை கைது செய்து, யானைத் தந்தத்தை பறிமுதல் செய்தனர். மேலும் யானை தந்தத்தை யாரிடம் வாங்கினார்கள்? யானையை கொன்று தந்தத்தை எடுத்தார்களா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
3 பேரையும் நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story
