திருவாரூரில் புதிதாக 3 பேருக்கு டெங்கு காய்ச்சல்
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 3 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பூந்தோட்டம் மற்றும் மாவூர் பகுதியைச் சேர்ந்த 2 ஆண்கள் மற்றும் திருவாரூர் நகர் பகுதியை சேர்ந்த ஒரு பெண் உட்பட 3 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மருத்துவமனையில் உள்ள தனிப்பிரிவில், சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் காய்ச்சல் வந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
Next Story
