ஒரே ஒரு மாணவி படித்த பள்ளியில் மேலும் 3 மாணவிகள்

x

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மீஞ்சூர் அருகே ஒரே ஒரு மாணவி மட்டும் படித்து வந்த அரசு தொடக்கப்பள்ளியில், மேலும் 3 மாணவிகள் சேர்ந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த வெள்ளம்பாக்கம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த 2 ஆண்டுகளாக ஒரே மாணவி படித்து வந்தார். இந்த நிலையில், கோடை விடுமுறை முடிந்து பள்ளி மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், 5ம் வகுப்பு படிக்கும் அந்த மாணவி மட்டும் பள்ளிக்கு வந்தார். இதனிடையே தற்போது மேலும் 3 மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால், மாணவர்களின் எண்ணிக்கை 4-ஆக அதிகரித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்