கிணற்றில் கார் கவிழ்ந்து விபத்து : துணை நடிகர் உட்பட 3 பேர் படுகாயம்

சென்னை ஆவடி பகுதியை சேர்ந்த துணைநடிகர், சுந்தர் தனது குடும்பத்துடன் பெங்களூரு சென்றுள்ளார்.
கிணற்றில் கார் கவிழ்ந்து விபத்து : துணை நடிகர் உட்பட 3 பேர் படுகாயம்
Published on

சென்னை ஆவடி பகுதியை சேர்ந்த துணைநடிகர், சுந்தர் தனது குடும்பத்துடன் பெங்களூரு சென்றுள்ளார். ஆம்பூர் அருகே சென்று கொண்டு இருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த கிணற்றுக்குள் விழுந்துள்ளது. அதில் சுந்தர், அவரது மனைவி மற்றும் 4 வயது ஆண் குழந்தை ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை காப்பாற்ற யாரும் வராத நிலையில் படுகாயம் அடைந்த சுந்தரே தனது செல்போன் மூலம் ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்துள்ளார். பின்னர் மொபைல் லோகேஷன் மூலம் விபத்து நடந்த இடத்தை கண்டறிந்த மருத்துவ குழுவினர் அவர்களை மீட்டு ஆம்பூர் மருத்துவமனையில் அனுமதித்தனர். துணைநடிகர் சுந்தர் 2.0 படத்தில் கிராபிக்ஸ் தொழில்நுட்ப பிரிவிலும் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com